Friday, January 13, 2017

வடை வகைகள்



வெஜிடபிள் வடை
















தேவையான பொருட்கள் :
விருப்பமான காய் - ஒன்று
பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி
அரிசி மாவு - அரை லிட்டர்
மிளகாய் வற்றல் - 8
உப்பு - சிறிது
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
காயை சுத்தமாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு அது கொதித்ததும் நறுக்கிய காய் துண்டுகளை அதில் சேர்த்து புரட்டி புரட்டி நன்கு வேக விடவும். வெந்ததும் அடுப்பை விட்டு இறக்கவும். பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், அரிசி மாவு, உப்பு எல்லாம் உரலில் போட்டு இடித்து பவுடராக்கிக் கொள்ளவும். இந்த பவுடரை வெந்த காயுடன் சேர்த்து கலந்து போதிய தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதிக்கத் தொடங்கியதும் கலவையை வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.


தவலை வடை















தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - ஒரு லிட்டர்
துவரம் பருப்பு - ண் லிட்டர்
உளுந்து பருப்பு - 100 மி.லி.
தேங்காய்த் துருவல் - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 8
மிளகாய் வற்றல் - 8
காயம் - சிறிது
கடுகு - சிறிது
எண்ணெய் - போதுமானது
உப்பு - சிறிது
செய்முறை :
அரிசியையும், பருப்புகளையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் கொட்டி மூன்று மணி நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு உரலில் போட்டு ஆட்ட வேண்டும். இப்படி ஆட்டும்போது ஒன்றன் பின் ஒன்றாக தேங்காய் துருவல், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் ஆகியவற்றையும் சேர்த்து ஆட்ட வேண்டும். பிறகு கடுகை தாளிதம் செய்து கொட்டி நன்கு பிசைய வேண்டும். உப்பும் சேர்க்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி அது கொதிக்கத் தொடங்கியதும் கலவையை வடைகளாகத் தட்டிப் போட்டு வெந்ததும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


வாழைப்பூ வடை












தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு மூடி
பொட்டுக்கடலை - ஒரு மேஜைக்கரண்டி
அரிசி மாவு - ஒரு மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
பச்சை மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 2
மல்லிக்அரைரை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
வாழைப்பூவை நரம்பெடுத்து சுத்தப் படுத்தி துண்டுகளாக நறுக்கவும். பிறகு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துவிடவும். உரலில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு ஆட்டவும். கடைசியாக வெந்த பூவையும் போட்டு ஆட்டவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்அரைரை, கறிவேப்பிலை, உப்பு, அரிசி மாவு எல்லாம் கலந்து போதுமான தண்ணீர் சேர்த்து பிசைந்து வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதித்ததும் வடைகளாக தட்டி வேகவிடவும்.


ஜவ்வரிசி வடை












தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - அரை லிட்டர்
அரிசி மாவு - அரை லிட்டர்
பொட்டுக்கடலை - ஒரு மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 10
மல்லிக்அரைரை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - போதுமானது
எண்ணெய் - போதுமானது
தயிர் - ஒரு லிட்டர்
செய்முறை :
ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் தயிரில் கொட்டி ஊறச் செய்யவும். பிறகு அதை உரலில் இட்டு ஆட்டவும். இப்படி ஆட்டும்போது ஒன்றன்பின் ஒன்றாக அரிசி மாவு, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், மல்லிக்அரைரை, கறிவேப்பிலை ஆகியவற்றை யும் சேர்த்து ஆட்டவும். கடைசியாக உப்பையும் சேர்த்து எடுத்து நன்றாக பிசைந்து தயாராக வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது கொதிக்கத் தொடங்கியதும் பிசைந்து வைத்துள்ள ஜவ்வரிசி கலவையை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். இதற்கு சிறிய ஜவ்வரிசியே உகந்தது.


தயிர் வடை













தேவையான பொருட்கள் :
உளுந்து பருப்பு - அரை லிட்டர்
துவரம் பருப்பு - அரை லிட்டர்
மிளகாய் வற்றல் - 10
காயம் - சிறிது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - போதுமானது
தயிர் - போதுமானது
செய்முறை :
இரண்டு பருப்புகளையும் தனித்தனியே இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறப்போட வும். தண்ணீரை வடித்துவிட்டு இரண்டு பருப்பையும் ஒன்றாக உரலில் போட்டு ஆட்டவும். இப்படி ஆட்டும்போது ஒன்றன்பின் ஒன்றாக மிளகாய் வற்றல், காயம், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை யும் அதோடு சேர்த்து ஆட்டவும். கெட்டியாக இப்படி ஆட்டி எடுத்த மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு புரட்டிக் கொடுத்து வேகவைக்கவும். தயிரில் கடுகு தாளிதம் செய்து வெந்த வடைகளை எடுத்து தயிரில் போட்டு ஊறும்படி விடவும்.


மசால் வடை














தேவையான பொருட்கள் :
கடலைப் பருப்பு - அரை லிட்டர்
பச்சை மிளகாய் - 8
மல்லிக்அரைரை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஓர் அங்குலம்
உப்பு - சிறிது
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
கடலைப் பருப்பை பரப்பி அதன் மேல் தண்ணீர் தெளித்து நனைக்க வேண்டும். இவ்விதம் நனைந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் விட்டுவைத்து பிறகு தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பிறகு உரலில் இட்டு உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து ஆட்ட வேண்டும். பிறகு பச்சை மிளகாய், மல்லிக்அரைரை, கறிவேப்பிலை, பெரிய வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை துண்டு களாக நறுக்கி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பிலேற்றி எண்ணெய் கொதித்த தும் வடைகளாக தட்டிப் போட்டு வெந்ததும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


துவரம் பருப்பு வடை















தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - அரை லிட்டர்
மிளகாய் வற்றல் - 8
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காயம் - சிறிது
உப்பு - போதுமானது
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
பருப்பை தண்ணீரில் கொட்டி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு உரலில் ஆட்டவும். இப்படி ஆட்டும்போது ஒன்றன்பின் ஒன்றாக மிளகாய் வற்றல், சீரகம், காயம் ஆகியவற்றையும் சேர்க்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும் வடைகளாக தட்டிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்.




பக்கோடா வகைகள்



மெது பக்கோடா


தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி மாவு - அரை லிட்டர்
கடலை மாவு - அரை லிட்டர்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 8
மல்லிக்அரைரை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - போதுமானது
இஞ்சி - ஓர் அங்குலம்
எண்ணெய் - போதுமானது
பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
செய்முறை :
பச்சை அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தண்ணீர் விட்டுப் பிசையவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்அரைரை, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை துண்டுகளாக வெட்டி அதோடு சேர்த்து பிசையவும். கடைசியாக உப்பையும், பேக்கிங் சோடாவை யும் சேர்க்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது கொதித்தான தும் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வெந்ததும் அரி கரண்டியால் வெளியே எடுத்துக் கொள்ளவும்.


மைதா பக்கோடா















தேவையான பொருட்கள் :
மைதா மாவு - ஒரு லிட்டர்
அரிசி மாவு - அரை லிட்டர்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - ஒரு அங்குலம்
கொத்துமல்லிக்அரைரை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - போதுமானது
பேக்கிங் சோடா - சிறிது
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து சலிக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லிக்அரைரை, கறிவேப் பிலை ஆகியவற்றை துண்டுகளாக நறுக்க வும். சலித்த மாவுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். நறுக்கிய துண்டுகள், பேக்கிங் சோடா, உப்பு முதலியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு பிசையவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அது கொதித்ததும் மாவை சிறிது சிறிதாக எடுத்து பிசிறி விட்டு வெந்ததும் அரி கரண்டியால் எடுக்கவும்.
ரிப்பன் பக்கோடா
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - அரை லிட்டர்
கடலை மாவு - அரை லிட்டர்
மிளகாய் வற்றல் - 6
காயம் - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
புழுங்கல் அரிசியை தண்ணீரில் கொட்டி மூன்று மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உரலில் இட்டு ஆட்டிக் கொள்ளவும். பிறகு அதோடு கடலை மாவையும், மிளகாய் வற்றல், காயம், உப்பு, ஆகியவற்றையும் ஒன்றுபட ஆட்டிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது கொதிக்கத் தொடங்கியதும் முறுக்கு குழலில் ரிப்பன் அச்சைப் போட்டு பிழிந்து வெந்ததும் எடுக்கவும்.

இடியாப்பம்




தேவையான அளவு அரிசி மாவு எடுத்துக்கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். இந்த கொதிநீரை அரிசி மாவில் சேர்த்து சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இப்படி பிசைந்த மாவை இடியாப்ப இயந்திரத்தில் இட்டு இடியாப்பம் பிழிந்து இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். இதோடு தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
இடியாப்பம் - 2
தேவையான அளவு அரிசி மாவு எடுத்து தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு மூடி தேங்காய் துருவலுடன் கசகசா சிறிது கலந்து போதுமான அளவு வெல்லம் சேர்த்து இந்த கொதிநீரை அரிசி மாவில் கொட்டி பிசைந்து இடியாப்ப இயந்திரத்தின் உதவியால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இட்லி தட்டுகளில் இந்த பிழிந்த இடியாப்பத்தை வைத்து ஆவியில் நன்கு வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

பட்டாணி மசால்




தேவையான பொருட்கள் :
உலர்ந்த பட்டாணி - 2 கப்
உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
பெரிய வெங்காயம் - 1
தயிர் - ஒரு கப்
தக்காளி (பெரியது) - ஒன்று
நெய் - போதுமானது
மிளகாய் வற்றல் - 6
மிளகாய் பவுடர் - அரை தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு பற்கள் - 3
மஞ்சள் பவுடர் - அரை தேக்கரண்டி
மல்லிப்பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - போதுமானது
செய்முறை :
பட்டாணியை ஓர் இரவு ஊறவைத்து மறுநாள் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவைக்கவும். உருளைக் கிழங்கை துண்டுகளாக நறுக்கி நெய்யில் வதக்கி எடுத்துக் கொள்ளவும். தக்காளி, இஞ்சி, பெரிய வெங்காயம் ஆகியவற்றை துண்டு களாக நறுக்கி நெய்விட்டு வதக்கி அதோடு தயிர், உப்பு மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து கிளறவும். பிறகு உருளைக்கிழங்கு மற்றும் வேகவைத்த பட்டாணியையும் சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.

பூரி




தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - அரை லிட்டர்
பம்பாய் ரவை - அரை லிட்டர்
மைதா மாவு - அரை லிட்டர்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
கோதுமை மாவு, ரவை, மைதா மூன்றையும் கலந்து உப்பு சேர்த்து போதுமான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே விட்டு வைக்கவும். பிறகு உருட்டி உருட்டி பூரிக்கட்டையில் வைத்து தேய்த்து வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் தேய்த்த பூரியை போட்டு வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.

சப்பாத்தி




தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - ஒரு லிட்டர்
உப்பு - போதுமானது
தண்ணீர் - போதுமானது
செய்முறை :
தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து அதில் சிறிது சிறிதாக கோதுமை மாவை கொட்டி கிளறவும். பிறகு அடுப்பை விட்டு இறக்கி ஒரு தட்டில் அதைக் கொட்டி கையை தண்ணீரில் நனைத்து பிசைந்து சப்பாத்தியாகத் தட்டி சப்பாத்திக் கல்லில் எண்ணெய் விட்டு அதில் போட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

Friday, December 30, 2016

அடை வகைகள்,


பச்சை அரிசி அடை













தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி - அரை லிட்டர்
கடலை பருப்பு - அரை லிட்டர்
துவரம் பருப்பு - 200 மி.லி.
பாசிப் பருப்பு - 100 மி.லி.
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மூடி
காயம் - சிறிது
மிளகாய் வற்றல் - 6
பச்சை மிளகாய் - 6
உப்பு - போதுமானது
செய்முறை :
அரிசியோடு மூன்று பருப்பு வகைகளை யும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் கொட்டி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு உரலில் அவற்றை இட்டு ஆட்டவும். இப்படி ஆட்டும்போது ஒன்றன்பின் ஒன்றாக தேங்காய் துருவல், சீரகம், காயம், மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். கடைசியில் உப்பு சேர்த்து அடைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி இருபுறமும் புரட்டி வேகவிட்டு எடுக்கவும்.


புழுங்கல் அரிசி அடை











தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - அரை லிட்டர்
பச்சை அரிசி - அரை லிட்டர்
துவரம் பருப்பு - அரை லிட்டர்
கடலை பருப்பு - 100 மி.லி.
உளுந்து பருப்பு - 50 மி.லி.
காயம் - சிறிது
உப்பு - போதுமானது
மிளகாய் வற்றல் - 8
செய்முறை :
இரண்டு வகை அரிசி, மூன்று வகை பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தண்ணீரில் கொட்டி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு உரலில் இட்டு ஆட்டவும். இப்படி ஆட்டும் போது ஒன்றன்பின் ஒன்றாக மற்றவற்றையும் சேர்த்து ஆட்டி அடைகளாகத் தட்டி வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் அடை
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - ஒரு லிட்டர்
தேங்காய் - ஒன்று
புளி - எலுமிச்சம்பழம் அளவு
மிளகாய் வற்றல் - 10
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
தேங்காய் துருவல், புளி, உப்பு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை, காயம் எல்லாம் எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிசியை கொட்டி மூடி வைக்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை உரலில் இட்டு ஆட்டவும். பிறகு அதோடு ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களைச் சேர்த்து நன்கு பிசைந்து ஒன்று சேரும்படி செய்யவும். பிறகு ஒரு துண்டு வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் இந்த கலவையை உருண்டை உருண்டையாக உருட்டி வைத்து கையால் அகலமாகவும், வட்டமாகவும் பரவும்படி தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் தட்டிய அடையை போட்டு வேகவிட்டு புரட்டி மறுபக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.


அரிசி மாவு அடை










தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - ஒரு லிட்டர்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 8
கடலை பருப்பு - 50 மி.லி.
பாசிப் பருப்பு - 50 மி.லி.
தேங்காய்த் துருவல் - ஒரு மூடி
உப்பு - போதுமானது
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் மாவைச் சேர்த்து கிளறவும். அவசியமானால் மேலும் தண்ணீர் சேர்த்து கிளறவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும். கடைசியில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிசைய அதிகப்படி தண்ணீர் தேவைப்பட்டால் வெந்நீர் சேர்த்து பிசையவும். பிறகு அடை களாகத் தட்டி அடைக்கல்லில் வேகவைத்து எடுக்கவும்.

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...