Friday, December 30, 2016

தோசை வகைகள்,


ராகி தோசை











தேவையான பொருட்கள் :
ராகி - அரை லிட்டர்
பச்சை அரிசி - அரை லிட்டர்
உளுந்து பருப்பு - 200 மி.லி.
உப்பு - போதுமானது
செய்முறை :
ராகி, பச்சை அரிசி மற்றும் உளுந்து பருப்பை தனித்தனியே தண்ணீரில் கொட்டி மூன்று மணி நேரம் ஊறவிடவும். முதலில் ராகியை உரலில் போட்டு ஆட்டவும். பிறகு அதோடு அரிசியை சேர்த்து அரைக்கவும். கடைசியாக உளுந்து பருப்பையும் சேர்த்து அரைக்கவும். பிறகு உப்பு சேர்த்து ஓரிரவு புளிக்க வைத்து மறுநாள் காலையில் தோசை வார்க்கலாம்.
மசாலா தோசை
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - அரை லிட்டர்
பச்சை அரிசி - அரை லிட்டர்
உளுந்து பருப்பு - 200 மி.லி.
மைதா மாவு - 2 மேஜைக்கரண்டி
உப்பு - ஒரு மேஜைக்கரண்டி
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
இரண்டு அரிசியையும் நன்றாகக் கலந்து தண்ணீரில் ஊறப்போடவும். உளுந்து பருப்பை தனியாக ஊறப்போடவும். நான்கு மணி நேரம் ஊறியதும் அரிசியை உரலில் இட்டு ஆட்டவும். நைசாக ஆட்ட வேண்டியதில்லை. உளுந்து பருப்பை நைசாக ஆட்டி இரண்டு மாவையும் ஒன்று கலந்து மைதா மாவையும் சேர்க்கவும். பிறகு ஓர் இரவு அப்படியே வைத்து மறுநாள் காலையில் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
பிறகு உருளைக்கிழங்கை வேகவைத்து உரித்து தனியே மசாலா தயாரித்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மாவை கல்லில் ஊற்றி பரப்பிவிடவும். ஒரு கரண்டி மசாலாவை நடுவே வைத்து தோசையில் ஒரு பக்கத்தை தூக்கி மசாலாவை மூடவும். புரட்டிப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் தோசை
தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி - அரை லிட்டர்
தேங்காய் - ஒரு மூடி
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை :
பச்சை அரிசியை தண்ணீரில் கொட்டி இரண்டு மணி நேரம் ஊறவைத்து உரலில் போட்டு ஆட்டவும். தேங்காய் துருவலையும் அதோடு பிறகு சேர்க்கவும். கடைசியாக உப்பையும் சேர்த்து உடனடியாக தோசை வார்க்கலாம். மாவு புளிக்கத் தேவை இல்லை.


வெந்தய தோசை









தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி - அரை லிட்டர்
புழுங்கல் அரிசி - அரை லிட்டர்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உளுந்து பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
தயிர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - போதுமானது
செய்முறை :
அரிசிகள், வெந்தயம், உளுந்து பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் கொட்டி நான்கு மணி நேரம் ஊறியதும் உரலில் இட்டு ஆட்டவும். ஆட்டும்போது மிளகாய் வற்றல், தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். ஓர் இரவு புளிக்க வைத்து மறுநாள் காலையில் தோசை வார்க்கவும்.
இட்லி - தோசை ஆகிய இரண்டுக்குமே உப பதார்த்தமாக சாம்பர், சட்னி அல்லது இட்லி பொடி தேவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித உப பதார்த்தம் பிடித்தமாக இருக்கும். ஆகவே அவரவருக்கு பிடித்தமான உப பதார்த்தத்தை சப்ளை செய்தாக வேண்டும். ஆகவே இந்த மூன்று வகை உப பதார்த்தங்களும் தயாராக வைத்து அவரவருக்கு எந்த உபபதார்த்தம் விருப்பமோ அதை சப்ளை செய்ய வேண்டும். இரண்டு உப பதார்த்தம் விரும்பினாலும் அவ்விதமே சப்ளை செய்ய வேண்டும். சாம்பாரைப் பொறுத்தவரை சாம்பார் பொடி தயாரித்துக் கொண்டு ஏதாவது ஒரு காயை பயன்படுத்தி சாம்பார் தயாரித்துக் கொள்ளலாம். இட்லி பொடியை பொறுத்தவரை எண்ணெய் சேர்ப்பது அவசியம்.

மைதா தோசை
















தேவையான பொருட்கள் :
மைதா மாவு - அரை லிட்டர்
அரிசி மாவு - அரை லிட்டர்
புளித்த மோர் - போதுமானது
சிறிய வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 15
உப்பு - போதுமானது
கடுகு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
இரண்டு மாவையும் நன்றாகக் கலந்து உப்பு சேர்த்து மோர் விட்டு கரைத்து துண்டு செய்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசை வார்க்கலாம்.

No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...