Friday, December 30, 2016

உப்புமா,



அவல் உப்புமா
















தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - ஒரு லிட்டர்
எலுமிச்சம் பழம் - 2
ந. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
உளுந்து பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 10
தேங்காய் துருவல் - ஒரு மூடி
உப்பு பவுடர் - ஒரு தேக்கரண்டி
செய்முறை :
அவலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதற்கு மேல் தண்ணீர் நிற்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விடவும். வாணலியை அடுப்பில் ஏற்றி துவரம் பருப்பு சேர்த்து பருப்புகள் சிவப்பாக மாறும்வரை புரட்டி, துண்டுகளாக வெட்டிய பச்சை மிளகாய் மற்றும் உப்பைச் சேர்க்கவும். பிறகு ஊறவைத்த அவலையும் போட்டு கிளறவும். நன்கு வெந்ததும் அடுப்பை விட்டு இறக்கி எலுமிச்சை பழத்தைப் பிழிந்துவிட்டு கிளறவும். பிறகு தேங்காய் துருவலை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

அரிசி உப்புமா












தேவையான பொருட்கள் :
அரிசிக் குருணை - அரை லிட்டர்
பெரிய வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - அரை மூடி
எலுமிச்சம் பழம் - ஒன்று
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஐந்து
இஞ்சி - ஓர் அங்குலம்
செய்முறை :
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அடுப்பிலேற்றி அதில் பச்சை அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டு மறுபடி வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு அதில் துண்டுகளாக நறுக்கிய பெரிய வெங்காயம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய் துண்டு, இஞ்சித் துண்டு ஆகியவற்றைச் சேர்க்கும் முன் கடுகு, உளுந்து பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய மூன்றையும் தாளிதம் செய்யவும். தாளிதம் செய்தான பிறகு ஒரு பங்கு குருணைக்கு இரண்டு பங்கு தண்ணீர் வீதம் சேர்த்து கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். பிறகு குருணையை கொட்டி கிளறி வெந்ததும் வாணலியின் வாயை ஒரு தட்டால் மூடி சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

அவல் உப்புமா - 2












தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - ஒரு லிட்டர்
எலுமிச்சம் பழம் - ஒன்று
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
தேங்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - 10
உப்பு - ஒரு மேஜைக்கரண்டி
உளுந்து பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
செய்முறை :
அவலைச் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து பருப்பு ஆகியவற்றை போட்டுக் கிளறவும். பிறகு ஊறவைத்த அவலை தண்ணீர் வடித்துவிட்டு வாணலியில் சேர்த்துக் கிளறவும். வெந்தானதும் அடுப்பைவிட்டு இறக்கி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விதைகளை நீக்கிவிட்டு அதை உப்புமாவில் சேர்த்து நன்கு கிளறவும். இதன்பின் தேங்காயை துருவி அந்த துருவலையும் சேர்த்து நன்கு கிளறவும். விருப்பம் உள்ளவர்கள் முந்திரி பருப்பையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கிளறிக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...