வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள் :
உலர்ந்த பேரீச்சை - 6
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
இஞ்சி (பொடியாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
பூண்டு (பொடியாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (பொடியாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
கதம்ப காய்கறிகள் - 2 கோப்பை
(சிறு துண்டுகளாக்கிய முட்டைகோசு,
கேரட், பீன்ஸ், காளான், வெங்காயத்தாள்,
குடமிளகாய், மூங்கில் குருத்து)
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
வெள்ளை மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
தண்ணீர் - 4 கோப்பை
சோயா ஸாஸ் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் குழம்பு (ளீஜுஷ்யியிஷ் றீழிற்உள) - 1 தேக்கரண்டி
சோம்புப் பொடி - கால் தேக்கரண்டி
அவித்த நூடுல்ஸ் - அரை கோப்பை
தூவி அலங்கரிக்க :
கொத்துமல்லித் தழை (பொடியாய் நறுக்கி)
- 1 மேசைக்கரண்டி
செய்முறை :
பேரீச்சம் பழத்தை அரை கோப்பை சுடுநீரில் இட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும். பழத்தின் ஈரம் போக்கி ஒவ்வொன்றையும் 4 சதுரத் துண்டுகளாக்கவும். விதைகளை எறிந்துவிடவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சூடேற்ற வும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய வற்றை சில நொடிகள் வதக்கவும். அனைத்து காய்களையும், அஜினோ மோட்டோ, மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும். கொழுந்து விட்டெறியும் தீயில் 2 நிமிடம் வைத்திருக்க வும். கலவையை வாணலியில் இருந்து கிண் ணத்துக்கு மாற்றி ஒருபுறமாக வைக்கவும்.
எஞ்சியுள்ள 3அரை கோப்பை தண்ணீரை வாணலியில் வைத்து சோயா ஸாஸ், மிளகாய் குழம்பு (ளீஜுஷ்யியிஷ் றீழிற்உள), சோம்புப் பொடி, உப்பு, பேரீச்சை, நீர் (பேரீச்சை ஊறவைத்தது) ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். குறைவான தீயில் 5 நிமிடம் மூடாமல் வைக்கவும். காய்கறி, நூடுல்ஸ் சேர்க்கவும். நன்றாகக் கலந்து பெரிய தீயில் ஒரு நிமிடம் வைக்கவும். மூடத் தேவையில்லை. கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
வினிகரில் ஊறிய பச்சை மிளகாய், சோயா ஸாஸ், கடும் சுவைக் குழம்பு (வீழிஐஆதீ றீழிற்உள), மிளகாய் குழம்பு (ளீஜுஷ்யியிஷ் றீழிற்உள), செகுவான் ஸாஸ் இவற்றில் ஒன்றை தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தலாம்.
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையான பொருட்கள் :
சோளம் பெரிய சைஸ் - 1 (முற்றாதது)
தண்ணீர் - 4அரை கோப்பை
இஞ்சிப்பசை - 1அரை தேக்கரண்டி
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
கருமிளகு - அரை தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
சோளமாவு (அரை கோப்பை நீருடன் கலந்து)
- 4 மேசைக்கரண்டி
தண்ணீர் - அரை கோப்பை
தூவி அலங்கரிக்க :
முறுகலான நூடுல்ஸ் - ண் கோப்பை
செய்முறை :
சோளத்தின் உறை போன்ற பகுதியை அகற்றிவிடவும். சோளத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கவும். மூடிய பாத்திரம் அல்லது ப்ரஷர் குக்கரில் 2அரை கோப்பை தண்ணீர் வைத்து சோளத்தை வேகவிடவும். உப்பு சேர்க்கத் தேவை இல்லை. ஆறியதும் சோளமணிகளை உதிர்த்துக் கொள்ளவும். சோளம் அவித்த நீரை ஒதுக்கிவிட வேண்டாம். சோளத்தில் உள்ள உயிர்ச் சத்துக்கள் அதிலும் இருக்கும்.
வாணலியில் சோளமணிகளைப் போட்டு, சோளம் அவித்த நீர், மிச்சமிருந்த 2 கோப்பை தண்ணீர், இஞ்சிப்பசை, அஜினோ மோட்டோ, மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு சேர்க்கவும்.
நன்றாகக் கலக்கி கொதிக்கவிடவும். மூட வேண்டியதில்லை. தீயைக் குறைத்து 7 நிமிடம் வேகவிடவும். கலவையை மத்தி னால் மசித்துக் கொள்ளவும். சோளமாவை சூப் திடமாகிறவரை சேர்க்கவும். பரிமாறு வதற்கு முன் முறுகலான நூடுல்ஸ் தூவிக் கொள்ளவும். சூடாகப் பரிமாறலாம்.
தக்காளி சூப்
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சிப்பசை - அரை தேக்கரண்டி
பூண்டுப் பசை (விரும்பினால்) - 1 தேக்கரண்டி
கொத்துமல்லித்தழை
(சன்னமாய் நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
புதிதான இலை (சன்னமாய் துணித்து)
- 1 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
ஸ்டாக் (அ) நீர் - 3அரை கோப்பை
கருமிளகு - அரை தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
சோளமாவு (கால் கப் நீரில் கரைத்து) - 1 மேசைக்கரண்டி
தூவி அலங்கரிக்க :
கொத்துமல்லித்தழை (பொடியாய் நறுக்கி)
- 2 மேசைக்கரண்டி
செய்முறை :
சுடுநீரில் தக்காளிகளை ஒரு நிமிடம் வைத்திருக்கவும். பிறகு ஈரம் போக்கி, தோலை அகற்றவும். சிறு துண்டுகளாக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும். இஞ்சிப்பசை, பூண்டுப்பசை, கொத்துமல்லித்தழை, புதினா இலை சேர்க்கவும். அரை நிமிட நேரம் புரட்டவும். தக்காளி, அஜினோமோட்டோ சேர்த்து, உச்ச அளவுத் தீயில் 3 நிமிடம் வதக்கவும். ஸ்டாக் (அ) நீர், மிளகு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். நன்றாகக் கலக்கி, கொதி நிலைக்குக் கொண்டுவரவும். தீயைக் குறைத்து 7 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். மூடத் தேவையில்லை. சூப் ~திக்|காகிறவரை சோளமாவுக் கரைசலை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். கொத்துமல்லித் தழை தூவி, சூடாகப் பரிமாறலாம்.
கதம்ப சூப்
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி (சன்னமாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
பூண்டு (சன்னமாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (சன்னமாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் (சன்னமாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
முட்டைக்கோசு (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
காலிபிளவர் (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
கேரட் (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
பிரெஞ்சு பீன்ஸ் (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
தக்காளி (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
காளான் (விரும்பினால்) (சன்னமாய் நறுக்கி)
- கால் கோப்பை
பச்சை மிளகாய் (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
ஸ்டாக் (அ) நீர் - 4 கோப்பை
வெள்ளை மிளகு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
சோயா ஸாஸ் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
சோளமாவு (கால் கப் நீர் கலந்து) - 2 மேசைக்கரண்டி
தூவி அலங்கரிக்க :
கொத்துமல்லித் தழை (சன்னமாய் நறுக்கி) - 2 மேசைக்கரண்டி
செய்முறை :
வாணலியில் எண்ணெயை சூடுபடுத்தவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத் தாள் சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கவும். காய்கள், அஜினோமோட்டோ மற்றும் உப்பு சேர்க்கவும். தீயை உச்ச அளவில் வைத்து 2 நிமிடம் வதக்கவும். வாணலியில் இருந்து மாற்றி ஒருபுறமாக வைக்கவும்.
ஸ்டாக் (அ) நீர், வெள்ளை மிளகு, சர்க்கரை, சோயா ஸாஸ், வினிகர் மற்றும் உப்பை ஒன்று சேர்க்கவும். நன்றாகக் கிளறி கொதிக்க விடவும். குறைவான தீயில் 2 நிமிடத்திற்கு மூடாமல் வைக்கவும். சோளமாவு சேர்த்து சூப்பை திடமாக்கவும். தயார் செய்திருந்த காய்களின் கலவையை சேர்க்கவும். குறைவான தீயில் 3 நிமிடத்திற்கு மூடாமல் வைத்திருக்கவும். கிளறி விடவும். கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறலாம்.
பச்சைப் பட்டாணி சூப்
தேவையான பொருட்கள் :
ஸ்டாக் அல்லது தண்ணீர் - 3அரை கோப்பை
இஞ்சி (பொடியாய் நறுக்கியது)
- 1 தேக்கரண்டி
பச்சைப் பட்டாணி - 1 கோப்பை
தக்காளி - 2 (பெரிய சைஸ்)
பாலடைக் கட்டி - அரை கோப்பை
(சிறிய சதுரங்களாய்)
(கால்ளு மு கால்ளு) அளவு, லேசாக ஃப்ரை செய்தது)
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
வெள்ளை மிளகு - அரை தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
சோயாஸாஸ் - 1 மேசைக்கரண்டி மிளகாய்குழம்பு (ளீஜுஷ்யியிஷ் றீழிற்உள) - 1 தேக்கரண்டி
சோளமாவு (கால் கோப்பை நீர் கலந்து)
- 2 மேசைக்கரண்டி
தூவி அலங்கரிக்க :
கொத்துமல்லித் தழை (பொடியாய் நறுக்கி)
- 1 மேசைக்கரண்டி
செய்முறை :
சிறிது சூடான நீரில் தக்காளியை ஒரு நிமிடம் வைத்திருக்கவும். ஈரம் போக்கி, தோலை அகற்றவும். சிறு துண்டுகளாக்கி ஒருபுறம் வைக்கவும்.
~ஸ்டாக்|கை கொதிக்கவிடவும். இஞ்சி, பச்சைப் பட்டாணி சேர்க்கவும். கலவையை மூடாமல் குறைவான தீயில் 5 நிமிடம் வேகவிடவும். தக்காளி, பாலடைக்கட்டி, மிளகு, அஜினோமோட்டோ, சர்க்கரை, உப்பு சேர்க்கவும். 3 நிமிடம் வேகவிடவும். சோயா ஸாஸ், மிளகாய் குழம்பு (ளீஜுஷ்யியிஷ் றீழிற்உள) சேர்க்கவும். சோளமாவு சேர்த்து, சூப் திடமாகிறவரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
No comments:
Post a Comment