முந்திரிப் பருப்பு பர்பி
தேவையான பொருட்கள் :
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - 500 கிராம்
மைதா - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கிலோ
பால் - 2 கப்
நெய் - 200 கிராம்
செய்முறை :
முந்திரிப் பருப்பை தண்ணீரில் கொட்டி அரை மணி நேரம் ஊறியதும் எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை அம்மியில் வைத்து சிறிது பால் தெளித்து நன்கு அரைத்துக் கொள்ளவும். எஞ்சியுள்ள பாலில் அரைத்த முந்திரிப் பருப்பையும், தேங்காய் துருவலையும் சேர்த்துக் கலக்கவும். அடிப் பகுதி அகலமாக உள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் கலவையை அதில் ஊற்றவும். மற்றொரு பாத்திரத்தை வேறு ஓர் அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றவும். நெய் காய்ந்ததும் அதில் மைதாவைப் போட்டுக் கிளறவும். பவுன் நிறம் வந்ததும் அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய், முந்திரிப் பருப்பு கலவையில் மைதா கலவையை ஒன்று சேர்த்து பிறகு கிளறவும். பாத்திரத்தின் ஓரத்தில் கலவை ஒட்டாத நிலை வந்ததும் நெய் பூசிய தட்டில் கொட்டிப் பரப்பி பர்பியாக வெட்டிக் கொள்ளவும்.
சாக்லெட் பர்பி
தேவையான பொருட்கள் :
பால்கோவா - ஒரு கிலோ
நெய் - 2 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 250 கிராம்
சாக்லெட் பவுடர் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 10 கிராம்
செய்முறை :
கோவாவை சிறு சிறு துண்டுகளாக உடைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் பால்கோவா துண்டுகளைப் போட்டு வறுக்கவும். துண்டுகள் மிருதுவான நிலை அடைந்ததும், அதில் சர்க்கரையையும், நெய்யையும் சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவை வாணலியின் ஓரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் வாணலியை அடுப்பைவிட்டு இறக்கிவிடவும். இந்த கலவையை இரண்டு பங்காகப் பிரிக்கவும். ஒரு பங்கை நெய் பூசிய ஒரு தட்டில் கொட்டி ஒரே சீராகப் பரப்பவும். மற்ற பங்கில் சாக்லெட் பவுடர் சேர்க்கவும். கிளறி சாக்லெட் பவுடர் நன்கு ஒன்று கலந்ததும் முன்பு பரப்பியுள்ள கலவை மீது கொட்டி ஒரே சீராகப் பரப்பிவிடவும். முந்திரிப் பருப்பை துண்டுகளாக்கி இந்த கலவை மீது தூவி பிறகு வேண்டிய அளவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தேங்காய் பர்பி
தேவையான பொருட்கள் :
தேங்காய் - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு
ரோஸ் வாட்டர் - தேவையான அளவு
செய்முறை :
தேங்காயைத் துருவி துருவல் எவ்வளவு உள்ளதோ அதே அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு பாத்திரத்தை அடுப்பிலேற்றி மிதமான தீயில் கிளற வேண்டும். கிளறிக் கொண்டே அடிக்கடி கலவை எப்படி உள்ளது எனக் கவனிக்க வேண்டும். கலவையை எடுத்தால் சர்க்கரை கம்பி கம்பியாக தோன்றும் நிலை வரும். அப்போது அடுப்பை விட்டு இறக்கி அதில் ஏல அரிசியை பொடித்துத் தூவ வேண்டும். பிறகு ரோஸ் வாட்டர் அல்லது ரோஸ் அத்தர் சிறிது சேர்க்க வேண்டும். ஒரு தட்டில் நெய் பூசி கலவையை கொட்டி பரப்பி சூடாக இருக்கும்போதே வேண்டிய உருவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
நிலக்கடலை பர்பி
தேவையான பொருட்கள் :
நிலக்கடலைப்
பருப்பு - ஒரு கிலோ
கிஸ்மிஸ் - 250 கிராம்
சர்க்கரை - ஒரு கிலோ
தேங்காய் கொப்பரை - 100 கிராம்
ஏலக்காய் - 8
செய்முறை :
நிலக்கடலைப் பருப்பை வாணலியில் இட்டு அடுப்பிலேற்றி லேசாக வறுத்து அடுப்பைவிட்டு இறக்கி பருப்பை தேய்த்துப் புடைத்து தோலை போக்கி பிறகு இடித்து தூளாக்கிக் கொள்ள வேண்டும். சர்க்கரையை பாகாக தயாரித்து அதில் நிலக்கடலைத் தூள், ஏல அரிசித் தூள், தேங்காய் கொப்பரை மற்றும் கிஸ்மிஸ் ஆகியவற்றை சேர்த்து ஒன்றுபட நன்கு கிளறவும். பிறகு ஒரு தட்டில் நெய் பூசி அதில் இந்த கலவையைக் கொட்டி ஒரே சீராகப் பரப்பி சூடு ஆறுவதற்கு முன்பாக வேண்டிய அளவில் கத்தியால் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
காப்பி பர்பி
தேவையான பொருட்கள் :
தேங்காய்த் துருவல் - 2 கப்
புரூ காப்பி
டிகாக்ஷன் - ஒரு கப்
சர்க்கரை - 2அரை கப்
நெய் - 2 மேஜைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 5
செய்முறை :
சர்க்கரையோடு அது நனையும் அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி கிளறி பாகு காய்ச்சவும். இந்த பாகுடன் காபி டிகாக்ஷன், தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கவும். தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். எல்லாம் கலந்து கெட்டி பதம் வந்ததும் ஒரு தட்டில் நெய் பூசி அதில் இந்தக் கலவையை கொட்டி ஒரே சமமாகப் பரப்பவும். முந்திரிப் பருப்பை துண்டுகளாக நறுக்கி இதன் மேல் தூவவும். பிறகு வேண்டிய உருவில் பர்பிகளாக வெட்டவும்.

No comments:
Post a Comment