முந்திரிப் பருப்பு அல்வா
தேவையான பொருட்கள் :
தூளாக்கிய முந்திரிப் பருப்பு - ஒரு கப்
மைதா - ஒரு கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 2 கப்
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மைதாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்புத் தூளையும், சர்க்கரையை யும் சுத்தமான வாணலியில் போட்டு கிளறவும். சர்க்கரை உருகத் தொடங்கியதும் மைதா மாவை அதோடு சேர்க்கவும். மாவை கிளறிக் கொண்டே சிறிது சிறிதாக நெய்யை அதோடு சேர்க்கவும். கலவை வாணலியின் ஓரத்தில் ஒட்டாத நிலை வரும்வரை இவ்விதம் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒட்டாத நிலை வந்ததும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்தக் கலவையை கொட்டி சமமாகப் பரப்பி, ஓரளவு ஆறியதும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பாசிப்பயறு அல்வா
தேவையான பொருட்கள் :
பாசிப்பயறு - 300 கிராம்
மைதா - 50 கிராம்
பால் - 4 கப்
சர்க்கரை - 400 கிராம்
நெய் - 400 கிராம்
முந்திரிப் பருப்பு - 20
ஏலக்காய் - 8
செய்முறை :
பாசிப் பயிறை ஓர் இரவு முழுவதும் ஊறப்போட்டு மறுநாள் காலையில் கசக்கி தோலை போக்கிவிடவும். பிறகு அதை வேக வைக்கவும். முந்திரிப் பருப்பை வறுத்து ஏல அரிசியை பொடித்துக்கொள்ளவும். வெந்த பாசிப் பருப்பை மசித்து அதோடு முந்திரிப் பருப்பு, ஏல அரிசி பவுடரை சேர்க்கவும். மைதாவை தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் பாசிப் பயறு மசியலையும் சேர்க்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி காய்ச்சவும். பாகுபதம் வந்ததும் அதோடு மைதா கலவையைச் சேர்த்து கிளறவும். கெட்டிபடத் தொடங்கிய தும் முந்திரிப் பருப்பு, ஏல பவுடர் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி ஆறியதும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
காசி அல்வா
தேவையான பொருட்கள் :
பறங்கி பழுத்தது - அரை கிலோ
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - கால் ராத்தல்
தேங்காய்த் துருவல் - அரை மூடி
முந்திரிப் பருப்பு - 6
நெய் - சிறிது
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி குமட்டியில் வைத்து சூடேற்றவும். பறங்கியின் தோலை சீவி அகற்றிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி அவற்றைப் பாலில் போட்டு வேகவிட வேண்டும். பிறகு ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் பாலில் வெந்த பறங்கித் துண்டுகளை போட வேண்டும். இப்படி பறங்கியின் துண்டு களைப் போடும்போது பால் முழுவதும் சுண்டி பறங்கிக்குள் சுவரிப்போய் விட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட பறங்கியை வாணலியில் போட்டு வதக்கி எடுத்துக் கொண்டு சர்க்கரையை பாகு காய்ச்ச வேண்டும். சர்க்கரைப் பாகில் பறங்கித் துண்டுகளைப் போட்டு மசித்து கிளறி அல்வா பதம் வந்ததும் அடுப்பை விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
ஆப்பிள் அல்வா
தேவையான பொருட்கள் :
பெரிய ஆப்பிள் - 2
சர்க்கரை - 20 மேஜைக்கரண்டி
பால் - ஒரு கப்
தேங்காயத்துருவல் - 12 மேஜைக்கரண்டி
பாதாம் பருப்பு - 20
நெய் - 8 மேஜைக்கரண்டி
செய்முறை :
ஒரு கப் கொதி நீரில் பத்து மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும். ஆப்பிளை துண்டுகளாக நறுக்கி ஒவ்வொரு துண்டையும் ஃபோர்க்கால் குத்தி குத்தி துவாரம் செய்து பிறகு சர்க்கரைப் பாகில் அதை போடவும். சர்க்கரை பாகில் முக்கால் மணி நேரம் அது ஊறியதும் கிளறவும். பிறகு அதோடு தேங்காய் துருவல், பாதாம் பருப்பு, பால், சர்க்கரை பாகு ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். ஆப்பிள் துண்டுகளை கரண்டியால் மசிக்கவும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை வாணலியை அடுப்பைவிட்டு இறக்கி, இறக்கி மசிக்கவும்.

No comments:
Post a Comment