Friday, December 30, 2016

டிஃபன் வகைகள்,


மல்லிக் கீரை கிச்சடி
















தேவையான பொருட்கள் :

அரிசி - 4 கப்
பச்சை பட்டாணி - 4 கப்
மல்லிக்அரைரை - 2 கட்டு
தேங்காய்த்துருவல் - ஒரு தேங்காய்
பூண்டு பற்கள் - 20
இஞ்சி - ஓர் அங்குலம்
பச்சை மிளகாய் - 8
பெரிய வெங்காயம் - 2
நெய் - 2 கப்
உப்பு - போதுமானது

செய்முறை :

மல்லிக்அரைரையை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அம்மியில் வைத்து அதோடு தேங்காய்த் துருவல், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் வெங்காயத் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த மசாலாக்களை அதோடு சேர்த்துக் கிளறவும். அரிசி, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சுத்தம் செய்து கழுவி சேர்க்கவும். அப்போது உள்ள லெவலுக்கு மேல் அரை அங்குலம் நிற்கும் விதத்தில் கொதிக்கும் நீரை ஊற்றவும். பிறகு கிளறவும். நன்கு அரிசி வெந்ததும் அடுப்பைவிட்டு இறக்கிக் கொள்ளவும்.


வெஜிடபிள் கிச்சடி











தேவையான பொருட்கள் :

அரிசி - 4 கப்
பச்சை பட்டாணி - 2 கப்
உருளைக்கிழங்கு - 6
காலிஃபிளவர்
   துண்டு செய்தது - 2 கப்
காரட்
   துண்டு செய்தது - ஒரு கப்
தக்காளி பெரியது - 4
வெங்காயம் - 4 (பெரியது)
பூண்டு பற்கள் - 6
இஞ்சி - 4 அங்குலம்
ஏலக்காய் - 8
கிராம்பு - 8
மசால் பட்டை - 2 அங்குலம்
மஞ்சள் பவுடர் - 2 தேக்கரண்டி
கசகசா - 6 தேக்கரண்டி
மல்லிக்அரைரை
 துண்டுகளாக்கியது - சிறிது
பச்சை மிளகாய் - 8
மிளகாய் பவுடர் - சிறிது
குங்குமப்பூ - 2 தேக்கரண்டி
பாதாம் பருப்பு - 20
கிஸ்மிஸ் - 20
வெங்காயம் - 6
நெய் - போதுமானது
உப்பு - போதுமானது

செய்முறை :

வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு அடுப்பிலேற்றி வெங்காயத் துண்டுகளை வதக்கவும். உரித்த பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும். ஏல அரிசி, மசால் பட்டை, கிராம்பு, மஞ்சள் பவுடர், கசகசா, மிளகாய் பொடி, பச்சை மிளகாய்த் துண்டுகள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும். எல்லாம் நன்கு ஒன்று சேரும்படி கிளறி பிறகு தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும். காரட்டையும் நறுக்கிச் சேர்க்கவும். பிறகு பச்சைப் பட்டாணியை சேர்க்கவும். காலிஃபிளவர், உருளைக்கிழங்கு ஆகிய வற்றையும் துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும். எல்லாம் நன்கு ஒன்று சேர்ந்ததும், ஒரு பெரிய பாத்திரமாக எடுத்து மாறிமாறி அடியில் ஒரு லேயர் அரிசி அதற்கு மேல் வெஜிடபிள் லேயர் அதற்கு மேல் அரிசி லேயர் இவ்விதம் மாறி மாறி போட்டு உச்சி லேயர் அரிசியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சியில் நெய்யை தெளித்து பாலில் குங்குமப்பூவை கரைத்து அதையும் சேர்த்து இறுக மூடி மிதமான தீயில் சுமார் 20 நிமிடம் வேக வைத்து பாதாம் பருப்பு, கிஸ்மிஸ், வதக்கிய வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.


வெஜிடபிள் கிச்சடி - 2




















தேவையான பொருட்கள் :

அரிசி - 2 கப்
எலுமிச்சம் பழம் - ஒன்று
துவரம் பருப்பு - அரை கப்
பெரிய வெங்காயம் - 4
உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
பச்சைப் பட்டாணி - அரை கப்
காலிஃபிளவர்
  (துண்டாக்கியது) - அரை கப்
இஞ்சி - 4 அங்குலம்
பச்சை மிளகாய் - 8
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - 2 மேஜைக்கரண்டி
ஏலக்காய் - 10
மிளகு - 8
கிராம்பு - 8
பட்டை - 2 அங்குலம்
மஞ்சள் பவுடர் - 2 தேக்கரண்டி
நெய் - 4 மேஜைக்கரண்டி

செய்முறை :

அரிசியையும், துவரம் பருப்பையும் ஒன்றாகக் கலந்து தண்ணீர் ஊற்றி நன்கு அலம்பவும். தக்காளி, காலிஃபிளவர், உருளைக்கிழங்கு ஆகியவற்றைத் துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி ஆகியவற்றையும் சிறுசிறு துண்டு களாக நறுக்கிக் கொள்ள வும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் சீரகம், பட்டை, மிளகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சித் துண்டுகளையும் போட்டு வதக்கவும். பிறகு பொரித்தவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக அவற்றோடு சேர்த்துக் கிளறவும். பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் ஆகியவற்றை நெட்டு வாக்கில் அதாவது நீளவாக்கில் பிளந்து அதோடு சேர்க்கவும். பிறகு மஞ்சள் பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். சிறிது நேரம் எல்லாவற்றையும் கிளறியானதும் இரண்டு கப் தண்ணீரை அவற்றுடன் சேர்க்கவும். இதன் பிறகு விரும்பினால் துண்டு துண்டாக நறுக்கிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும். பிறகு கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசி, பருப்பு ஆகியவற்றையும் சேர்க்கவும். இந்த நிலையில் அரிசி எந்த லெவலில் உள்ளதோ அதற்கு மேல் ஓர் அங்குலம் இடைவெளி விட்டு ஒரு தட்டால் மூடி பதினைந்து நிமிடம் தொடர்ந்து வேகவிடவும். வெந்தானதும் அடுப்பைவிட்டு இறக்கிக் கொள்ளவும்.


காரட் கிச்சடி














தேவையான பொருட்கள் :

காரட் - ஒரு கிலோ
அரிசி - 1அரை கிலோ
மிளகு - 20
கிராம்பு - 10
உப்பு - போதுமானது
மிளகாய் வற்றல் - 10
மஞ்சள் தூள் - 5 கிராம்
மல்லிக்அரைரை - சிறிது
எண்ணெய் - சிறிது

செய்முறை :

காரட்டை கழுவி மேல் தோலை சீவி நீக்கிவிட்டு அம்மியில் வைத்து அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய்விட்டு அதில் அரைத்த காரட்டைப் போட்டுக் கிளறவும். மிளகை தூள் செய்து சேர்க்கவும். கிராம்பு, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் பிறகு சேர்த்துக் கிளறவும். மிளகாய் வற்றலை துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். அரிசியை தண்ணீர்விட்டு களைந்து சேர்க்கவும். எவ்வளவு அரிசியோ அதைப்போல் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்துக் கிளறி வேகவிடவும். வெந்ததும் மல்லிக்அரைரையை துண்டு செய்து சேர்த்து கிளறி அடுப்பைவிட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...