Saturday, July 2, 2016

அவல் உப்புமா - 2

அவல் உப்புமா - 2


















தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - ஒரு லிட்டர்
எலுமிச்சம் பழம் - ஒன்று
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
தேங்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - 10
உப்பு - ஒரு மேஜைக்கரண்டி
உளுந்து பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
செய்முறை :
அவலைச் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து பருப்பு ஆகியவற்றை போட்டுக் கிளறவும். பிறகு ஊறவைத்த அவலை தண்ணீர் வடித்துவிட்டு வாணலியில் சேர்த்துக் கிளறவும். வெந்தானதும் அடுப்பைவிட்டு இறக்கி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விதைகளை நீக்கிவிட்டு அதை உப்புமாவில் சேர்த்து நன்கு கிளறவும். இதன்பின் தேங்காயை துருவி அந்த துருவலையும் சேர்த்து நன்கு கிளறவும். விருப்பம் உள்ளவர்கள் முந்திரி பருப்பையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கிளறிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...