Saturday, July 2, 2016

அரிசி உப்புமா




















தேவையான பொருட்கள் :
அரிசிக் குருணை - அரை லிட்டர்
பெரிய வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - அரை மூடி
எலுமிச்சம் பழம் - ஒன்று
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஐந்து
இஞ்சி - ஓர் அங்குலம்
செய்முறை :
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அடுப்பிலேற்றி அதில் பச்சை அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டு மறுபடி வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு அதில் துண்டுகளாக நறுக்கிய பெரிய வெங்காயம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய் துண்டு, இஞ்சித் துண்டு ஆகியவற்றைச் சேர்க்கும் முன் கடுகு, உளுந்து பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய மூன்றையும் தாளிதம் செய்யவும். தாளிதம் செய்தான பிறகு ஒரு பங்கு குருணைக்கு இரண்டு பங்கு தண்ணீர் வீதம் சேர்த்து கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். பிறகு குருணையை கொட்டி கிளறி வெந்ததும் வாணலியின் வாயை ஒரு தட்டால் மூடி சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...