Saturday, July 2, 2016

காரட் மசால்

காரட் மசால்














தேவையான பொருட்கள் :
காரட் - 8
தக்காளி - 16
பச்சை மிளகாய் - ஆறு
இஞ்சி - ஓர் அங்குலம்
துண்டு செய்த
     மல்லிக்அரைரை - 4 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானது
செய்முறை :
காரட், தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியையும் துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு காரட் துண்டுகளை அதில் போட்டு வேகவிடவும். வெந்ததும் அடுப்பை விட்டு இறக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் சீரகத்தையும் சேர்த்து அம்மியில் வைத்து அரைக்கவும். அதை வெந்த காரட்டுடன் சேர்த்துக் கிளறவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு அது பொரிந்தானதும் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு காரட் கலவையையும், உப்பையும் சேர்த்துக் கிளறி அடுப்பைவிட்டு இறக்கிக் கொள்ளவும்.

No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...