Thursday, June 16, 2016

பாசிப்பருப்பு லட்டு


















பாசிப்பருப்பு லட்டு

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - ஒரு கிலோ
சர்க்கரை அரைத்தது - ஒரு கிலோ
நெய் - ஒரு கிலோ
குங்குமப்பூ - சிறிது
வாதுமைப் பருப்பு - போதுமானது
பிஸ்தா பருப்பு - போதுமானது
ஏலக்காய் - போதுமானது

செய்முறை :

முதலில் பாசிப் பருப்பை தண்ணீரில் கொட்டி இரண்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். பிறகு நன்கு பிசைந்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதை உரலில் இட்டு நன்கு ஆட்ட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு ஆட்டிய பாசிப்பருப்பை அதில் போட்டு பவுன் நிறத்தை அடையும்வரை புரட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு அதோடு வாதுமை பருப்பு, பிஸ்தா பருப்பை சேர்க்க வேண்டும். ஏலக்காயைத் தூள் செய்து பிறகு சேர்க்க வேண்டும். குங்குமப்பூவை சிறிது பாலில் கரைத்துச் சேர்க்க வேண்டும். கடைசியாக அரைத்த சர்க்கரையைக் கொட்டிப் பிசைந்து லட்டுகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...