Thursday, June 16, 2016

ஆப்பிள் அல்வா

















ஆப்பிள் அல்வா

தேவையான பொருட்கள் :

பெரிய ஆப்பிள் - 2
சர்க்கரை - 20 மேஜைக்கரண்டி
பால் - ஒரு கப்
தேங்காயத்துருவல் - 12 மேஜைக்கரண்டி
பாதாம் பருப்பு - 20
நெய் - 8 மேஜைக்கரண்டி

செய்முறை :

ஒரு கப் கொதி நீரில் பத்து மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும். ஆப்பிளை துண்டுகளாக நறுக்கி ஒவ்வொரு துண்டையும் ஃபோர்க்கால் குத்தி குத்தி துவாரம் செய்து பிறகு சர்க்கரைப் பாகில் அதை போடவும். சர்க்கரை பாகில் முக்கால் மணி நேரம் அது ஊறியதும் கிளறவும். பிறகு அதோடு தேங்காய் துருவல், பாதாம் பருப்பு, பால், சர்க்கரை பாகு ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். ஆப்பிள் துண்டுகளை கரண்டியால் மசிக்கவும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை வாணலியை அடுப்பைவிட்டு இறக்கி, இறக்கி மசிக்கவும்.

No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...