மசால் இட்லி
தேவையான பொருட்கள் :பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - பத்து
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
தேங்காய் துருவல் - ஒரு மூடி
செய்முறை :
முதலில் சாதாரண இட்லிக்கு தயாரிப்பது போல் மாவு தயாரித்துக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு லிட்டர் அரிசி, கால் லிட்டர் உளுந்து பருப்பு ஆட்டி இந்த இட்லி மாவு தயாரிக்க வேண்டும்.
பிறகு பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய இரண்டையும் மறுநாள் காலையில் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறப்போட்டு தண்ணீரை வடித்துவிட்டு மிளகாய் வற்றல், மிளகுத்தூள், இஞ்சி துண்டுகள் ஆகியவற்றை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தேங்காய் துருவலையும் சேர்த்து எல்லாவற்றையும் இட்லி மாவோடு கலந்து கொள்ளவும்.
பிறகு இட்லி தட்டுகளில் இந்த மாவை வார்த்து இட்லிகளாகத் தயாரித்துக் கொள்ள வும்.
No comments:
Post a Comment