எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள் :அரிசி - 4 கப்
எலுமிச்சம் பழம் - 8 (பெரியது)
முந்திரிப் பருப்பு - 2 கப்
தேங்காய்த் துருவல் - ஒரு தேங்காய்
மஞ்சள் பவுடர் - 2 தேக்கரண்டி
நெய் - 1அரை கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 20
மல்லிக்அரைரை - சிறிது
செய்முறை :
அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி பாதி வெந்தானதும் அடுப்பைவிட்டு இறக்கி தண்ணீரை வடித்து விடவும். அதோடு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து சேர்க்கவும். பிறகு மஞ்சள் பவுடர், தேங்காய்த் துருவல் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு போதுமான உப்பு சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி கடுகைப் போட்டு அது பொரிந்ததும் முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வற்றல் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். பிறகு அதில் பாதி வெந்த நிலையில் உள்ள அரிசியையும் கொட்டிக் கிளறவும். துண்டு செய்த மல்லிக்அரைரையையும் சேர்த்து ஒரு தட்டால் மூடி பதினைந்து நிமிடம் வேகவிட்டு வெந்ததும் அடுப்பை விட்டு இறக்கிக் கொள்ளவும்.
No comments:
Post a Comment