கடலைப்பருப்பு போளி
தேவையான பொருட்கள் :கடலைப்பருப்பு - ஒரு கப்
மைதா - 1அரை கப்
சர்க்கரை - 1அரை கப்
ஏலக்காய் - 10
எண்ணெய் - போதுமானது
உப்பு - போதுமானது
செய்முறை :
மைதாவுடன் உப்பும், தண்ணீரும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து மூன்று மணி நேரம் அப்படியே வைத்துவிடவும். கடலைப் பருப்போடு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவிடவும். முக்கால் வேக்காடு ஆனதும் தண்ணீரை வடித்து விடவும். தண்ணீரை வடித்தான பிறகு சர்க்கரையை அந்தப் பருப்புடன் சேர்த்துக் கிளறவும். பிறகு சூடான நிலையிலேயே உரலில் பருப்பைப் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும். இப்படி இடிக்கும்போது ஏல அரிசியையும் சேர்த்து இடிக்க வேண்டும். மைதாவைப் பூரிபோல் மெல்லியதாக தேய்த்து அதில் இடித்த கடலைப் பருப்பை தூவி மேலே மற்றொரு பூரியால் மூடி ஓரங்களை அழுத்தி வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொரித்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment