Friday, June 24, 2016

கதம்ப சூப்

கதம்ப சூப்















தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி (சன்னமாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
பூண்டு (சன்னமாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (சன்னமாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் (சன்னமாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
முட்டைக்கோசு (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
காலிபிளவர் (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
கேரட் (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
பிரெஞ்சு பீன்ஸ் (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
தக்காளி (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
காளான் (விரும்பினால்) (சன்னமாய் நறுக்கி)
- கால் கோப்பை
பச்சை மிளகாய் (சன்னமாய் நறுக்கி) - கால் கோப்பை
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
ஸ்டாக் (அ) நீர் - 4 கோப்பை
வெள்ளை மிளகு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
சோயா ஸாஸ் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
சோளமாவு (கால் கப் நீர் கலந்து) - 2 மேசைக்கரண்டி
தூவி அலங்கரிக்க :
கொத்துமல்லித் தழை (சன்னமாய் நறுக்கி) - 2 மேசைக்கரண்டி
செய்முறை :
வாணலியில் எண்ணெயை சூடுபடுத்தவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத் தாள் சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கவும். காய்கள், அஜினோமோட்டோ மற்றும் உப்பு சேர்க்கவும். தீயை உச்ச அளவில் வைத்து 2 நிமிடம் வதக்கவும். வாணலியில் இருந்து மாற்றி ஒருபுறமாக வைக்கவும்.
ஸ்டாக் (அ) நீர், வெள்ளை மிளகு, சர்க்கரை, சோயா ஸாஸ், வினிகர் மற்றும் உப்பை ஒன்று சேர்க்கவும். நன்றாகக் கிளறி கொதிக்க விடவும். குறைவான தீயில் 2 நிமிடத்திற்கு மூடாமல் வைக்கவும். சோளமாவு சேர்த்து சூப்பை திடமாக்கவும். தயார் செய்திருந்த காய்களின் கலவையை சேர்க்கவும். குறைவான தீயில் 3 நிமிடத்திற்கு மூடாமல் வைத்திருக்கவும். கிளறி விடவும். கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறலாம்.



No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...