பால் போளி
தேவையான பொருட்கள் :
மைதா - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
வெல்லத்தூள் - 1அரை கப்
ஏலக்காய் - 10
கசகசா - ஒரு மேஜைக்கரண்டி
எண்ணெய் - போதுமானது
செய்முறை :
மைதாவை தண்ணீர் சேர்த்து பிசைந்து மெல்லிய பூரிகளாகத் தேய்த்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு இந்த பூரிகளை பொரித்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன் கசகசாவைச் சேர்த்து அம்மியில் அரைத்துக் கொள்ளவும். இதோடு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வெல்லத்தூளை சேர்த்து கொதிக்க வைக்க வும். வெல்லம் கரைந்ததும் ஏல அரிசியை தூள் செய்து அதோடு கலக்கவும். இந்த வெல்லப்பாகு சூடாக இருக்கும்போதே அதில் பொரித்து வைத்துள்ள பூரிகளை நனைத்து நனைத்து எடுக்கவும். இவற்றை ஒரு தட்டில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அவற்றின் மேல் எஞ்சிய வெல்லப்பாகை ஊற்றி அரை மணி நேரம் கழித்து உபயோகிக்கவும்.
No comments:
Post a Comment