இன்ஸ்டண்ட் ஜிலேபி
தேவையான பொருட்கள் :
மைதா - 2 கப்
தயிர் - 6 மேஜைக்கரண்டி
சமையல் சோடா - சிறிது
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - 2 கப்
மஞ்சள்
உணவு கலர் - அரை தேக்கரண்டி
நெய் - போதுமானது
செய்முறை :
மைதாவுடன் சமையல் சோடாவைக் கலந்து சலித்துக் கொள்ளவும். அரை கப் தண்ணீரை தயிரோடு சேர்க்கவும். பிறகு தயிரை அடித்து கட்டிகளை கரையச் செய்ய வும். பிறகு தயிரோடு மைதா மாவைச் சேர்க்க வும். சுமார் அரை மணி நேரம் இந்த மாவை அப்படியே வைத்துவிடவும். தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி மஞ்சள் உணவு கலரையும் சேர்த்து அடுப்பிலேற்றி பாகு காய்ச்சவும். வாணலி யில் நெய்யைவிட்டு அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். ஒரு கெட்டித் துணியாக எடுத்து அதன் நடுவில் துவாரம் போட்டு கலவையை அந்த துணியில் ஊற்றி முடிந்து கொள்ளவும். கொதிக்கும் நெய்யில் துணியில் உள்ள கலவையை ஜிலேபி உருவில் பிழியவும். முறுக்கு பிழிவது போன்றுதான் இதுவும். இப்படி நெய்யில் பொரித்த ஜிலேபியை சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment