புளியோதரை
தேவையான பொருட்கள் :பச்சை அரிசி - 2 கப்
தண்ணீர் - 5 கப்
புளி - எலுமிச்சம் பழம் அளவு
மிளகாய் வற்றல் - 15
மல்லி பவுடர் - 4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 8 தேக்கரண்டி
உளுந்து பருப்பு - 8 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
காயம் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - போதுமானது
மஞ்சள்பொடி - சிறிது
செய்முறை :
புளியை ஒரு மணி நேரம் ஊறவைத்து கரைக்கவும். மிளகாய் வற்றல், காயம், கடலைப் பருப்பில் பாதி, உளுந்து பருப்பில் பாதி மற்றும் மல்லி, வெந்தயம் ஆகியவற்றை வறுத்து உரலில் எல்லாவற்றையும் போட்டு இடிக்கவும். சாதத்தை தட்டில் கொட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பிலேற்றி கடுகு, உளுந்து பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளிதம் செய்து அதில் கரைத்த புளியை கொட்டிக் கிளறி கெட்டிப்பட்டதும் அடுப்பைவிட்டு இறக்கி சாதத்தில் சேர்த்து பிசைந்துகொள்ள வும். பிரியமுள்ளவர்கள் இதோடு பொரித்த வெள்ளை எள், கொத்துமல்லிக்அரைரை, கறிவேப்பிலை, நிலக்கடலைப் பருப்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment