Thursday, June 16, 2016

அவல் லட்டு
















அவல் லட்டு

தேவையான பொருட்கள் :

அவல் - அரை கிலோ
சர்க்கரை - அரை கிலோ
ரோஸ்வாட்டர் - சிறிது
நிலக்கடலை பருப்பு - 100 கிராம்

செய்முறை :

அவலை தண்ணீரில் கொட்டி நன்கு அலசி அசுத்தங்களை எல்லாம் கழுவியும், பொறுக்கியும் நீக்கவும். சிறு கற்களும் இல்லாதபடி சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் சுத்தம் செய்தான பிறகு வெயிலில் துணியை விரித்து அதன் மேல் அவலை பரவலாகப் பரப்பி உலர்த்த வேண்டும். நிலக்கடலைப் பருப்பை வறுத்து மேல் தோலை நீக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். சர்க்கரையை பாகு காய்ச்சி அதில் முதலில் அவலைப் போட்டு கிளற வேண்டும். பிறகு நிலக்கடலைப் பருப்பைச் சேர்த்து கிளற வேண்டும். கடைசியாக ரோஸ் வாட்டரைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். அடுப்பை விட்டு இறக்கி சூடு முழுமையாக ஆறும் முன்பாகவே உருண்டைகளாக உருட்டவும்.

No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...