தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள் :பச்சை அரிசி - 2 கப்
தண்ணீர் - 5 கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 8
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து பருப்பு - 4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 20
நெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி
செய்முறை :
சாதத்தை முதலில் தயாரித்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். தேங்காய்த் துருவலை வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காது இளம் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து பருப்பு, முந்திரிப் பருப்பு, துண்டுகளாக கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும். பிறகு ஏற்கனவே வறுத்தவற்றை சாதத்துடன் சேர்த்துக் கிளறவும். பிறகு உப்பை பொடித்து தூவி கிளறவும். வறுத்த தேங்காய் துருவலை கடைசியாக சேர்த்து கிளறவும். விருப்ப மானால் கறிவேப்பிலை, மல்லிக்அரைரை துண்டுகள், நிலக்கடலைப் பருப்பும் சேர்க்க லாம்.
No comments:
Post a Comment