Sunday, June 19, 2016

பால் குலாப்ஜாமுன்
















பால் குலாப்ஜாமுன்


தேவையான பொருட்கள் :

பால் பவுடர் - 3 கப்
மைதா - ஒரு கப்
சமையல் சோடா - 2 மேஜைக்கரண்டி
தயிர் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
தண்ணீர் - 4 கப்
நெய் - போதுமானது

செய்முறை :

தண்ணீரோடு சர்க்கரை சேர்த்து அடுப்பிலேற்றி பாகு காய்ச்சி தனியே வைத்துக்கொள்ளவும். மைதாவுடன் பால் பவுடர் கலந்து இவற்றோடு தயிர் மற்றும் சமையல் சோடாவைச் சேர்க்கவும். இப்படி சேர்த்து அவசியமானால் தண்ணீரும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு ஊறியதும் உபயோகிக்கவும்.


No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...