காரட் கிச்சடி
காரட் - ஒரு கிலோ
அரிசி - 1அரை கிலோ
மிளகு - 20
கிராம்பு - 10
உப்பு - போதுமானது
மிளகாய் வற்றல் - 10
மஞ்சள் தூள் - 5 கிராம்
மல்லிக்அரைரை - சிறிது
எண்ணெய் - சிறிது
செய்முறை :
காரட்டை கழுவி மேல் தோலை சீவி நீக்கிவிட்டு அம்மியில் வைத்து அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய்விட்டு அதில் அரைத்த காரட்டைப் போட்டுக் கிளறவும். மிளகை தூள் செய்து சேர்க்கவும். கிராம்பு, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் பிறகு சேர்த்துக் கிளறவும். மிளகாய் வற்றலை துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். அரிசியை தண்ணீர்விட்டு களைந்து சேர்க்கவும். எவ்வளவு அரிசியோ அதைப்போல் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்துக் கிளறி வேகவிடவும். வெந்ததும் மல்லிக்அரைரையை துண்டு செய்து சேர்த்து கிளறி அடுப்பைவிட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment