Thursday, June 16, 2016

பால்கோவா லட்டு




















பால்கோவா லட்டு

தேவையான பொருட்கள் :

பால்கோவா - ஒரு கிலோ
சர்க்கரை - 750 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
திராட்சை - 25 கிராம்
மைதா - 3 மேஜைக்கரண்டி
ஏல அரிசிதூள் - ஒரு தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - அரை தேக்கரண்டி
நெய் - போதுமானது

செய்முறை :

சர்க்கரையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி பாகு காய்ச்சவும். பால்கோவாவையும், மைதாவையும் ஒன்று கலந்து பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இப்படி உருட்டிய ஒவ்வோர் உருண்டையின் மேலும் ஒரு முழு முந்திரிப் பருப்பை திணிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய்யைவிட்டு கொதிக்கத் தொடங்கியதும் அதில் உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இதை சர்க்கரைப் பாகில் போட்டு பாகில் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

No comments:

Post a Comment

வடை வகைகள்

வெஜிடபிள் வடை தேவையான பொருட்கள் : விருப்பமான காய் - ஒன்று பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - அரை லிட்...