வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள் :உலர்ந்த பேரீச்சை - 6
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
இஞ்சி (பொடியாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
பூண்டு (பொடியாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (பொடியாய் நறுக்கி) - 1 தேக்கரண்டி
கதம்ப காய்கறிகள் - 2 கோப்பை
(சிறு துண்டுகளாக்கிய முட்டைகோசு,
கேரட், பீன்ஸ், காளான், வெங்காயத்தாள்,
குடமிளகாய், மூங்கில் குருத்து)
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
வெள்ளை மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
தண்ணீர் - 4 கோப்பை
சோயா ஸாஸ் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் குழம்பு (ளீஜுஷ்யியிஷ் றீழிற்உள) - 1 தேக்கரண்டி
சோம்புப் பொடி - கால் தேக்கரண்டி
அவித்த நூடுல்ஸ் - அரை கோப்பை
தூவி அலங்கரிக்க :
கொத்துமல்லித் தழை (பொடியாய் நறுக்கி)
- 1 மேசைக்கரண்டி
செய்முறை :
பேரீச்சம் பழத்தை அரை கோப்பை சுடுநீரில் இட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும். பழத்தின் ஈரம் போக்கி ஒவ்வொன்றையும் 4 சதுரத் துண்டுகளாக்கவும். விதைகளை எறிந்துவிடவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சூடேற்ற வும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய வற்றை சில நொடிகள் வதக்கவும். அனைத்து காய்களையும், அஜினோ மோட்டோ, மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும். கொழுந்து விட்டெறியும் தீயில் 2 நிமிடம் வைத்திருக்க வும். கலவையை வாணலியில் இருந்து கிண் ணத்துக்கு மாற்றி ஒருபுறமாக வைக்கவும்.
எஞ்சியுள்ள 3அரை கோப்பை தண்ணீரை வாணலியில் வைத்து சோயா ஸாஸ், மிளகாய் குழம்பு (ளீஜுஷ்யியிஷ் றீழிற்உள), சோம்புப் பொடி, உப்பு, பேரீச்சை, நீர் (பேரீச்சை ஊறவைத்தது) ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். குறைவான தீயில் 5 நிமிடம் மூடாமல் வைக்கவும். காய்கறி, நூடுல்ஸ் சேர்க்கவும். நன்றாகக் கலந்து பெரிய தீயில் ஒரு நிமிடம் வைக்கவும். மூடத் தேவையில்லை. கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
வினிகரில் ஊறிய பச்சை மிளகாய், சோயா ஸாஸ், கடும் சுவைக் குழம்பு (வீழிஐஆதீ றீழிற்உள), மிளகாய் குழம்பு (ளீஜுஷ்யியிஷ் றீழிற்உள), செகுவான் ஸாஸ் இவற்றில் ஒன்றை தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment