தக்காளி சூப்
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சிப்பசை - அரை தேக்கரண்டி
பூண்டுப் பசை (விரும்பினால்) - 1 தேக்கரண்டி
கொத்துமல்லித்தழை
(சன்னமாய் நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
புதிதான இலை (சன்னமாய் துணித்து)
- 1 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
ஸ்டாக் (அ) நீர் - 3அரை கோப்பை
கருமிளகு - அரை தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
சோளமாவு (கால் கப் நீரில் கரைத்து) - 1 மேசைக்கரண்டி
தூவி அலங்கரிக்க :
கொத்துமல்லித்தழை (பொடியாய் நறுக்கி)
- 2 மேசைக்கரண்டி
செய்முறை :
சுடுநீரில் தக்காளிகளை ஒரு நிமிடம் வைத்திருக்கவும். பிறகு ஈரம் போக்கி, தோலை அகற்றவும். சிறு துண்டுகளாக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும். இஞ்சிப்பசை, பூண்டுப்பசை, கொத்துமல்லித்தழை, புதினா இலை சேர்க்கவும். அரை நிமிட நேரம் புரட்டவும். தக்காளி, அஜினோமோட்டோ சேர்த்து, உச்ச அளவுத் தீயில் 3 நிமிடம் வதக்கவும். ஸ்டாக் (அ) நீர், மிளகு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். நன்றாகக் கலக்கி, கொதி நிலைக்குக் கொண்டுவரவும். தீயைக் குறைத்து 7 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். மூடத் தேவையில்லை. சூப் ~திக்|காகிறவரை சோளமாவுக் கரைசலை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். கொத்துமல்லித் தழை தூவி, சூடாகப் பரிமாறலாம்.
No comments:
Post a Comment