ஸ்வீட் கார்ன் சூப்
தேவையான பொருட்கள் :
சோளம் பெரிய சைஸ் - 1 (முற்றாதது)
தண்ணீர் - 4அரை கோப்பை
இஞ்சிப்பசை - 1அரை தேக்கரண்டி
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
கருமிளகு - அரை தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
சோளமாவு (அரை கோப்பை நீருடன் கலந்து)
- 4 மேசைக்கரண்டி
தண்ணீர் - அரை கோப்பை
தூவி அலங்கரிக்க :
முறுகலான நூடுல்ஸ் - ண் கோப்பை
செய்முறை :
சோளத்தின் உறை போன்ற பகுதியை அகற்றிவிடவும். சோளத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கவும். மூடிய பாத்திரம் அல்லது ப்ரஷர் குக்கரில் 2அரை கோப்பை தண்ணீர் வைத்து சோளத்தை வேகவிடவும். உப்பு சேர்க்கத் தேவை இல்லை. ஆறியதும் சோளமணிகளை உதிர்த்துக் கொள்ளவும். சோளம் அவித்த நீரை ஒதுக்கிவிட வேண்டாம். சோளத்தில் உள்ள உயிர்ச் சத்துக்கள் அதிலும் இருக்கும்.
வாணலியில் சோளமணிகளைப் போட்டு, சோளம் அவித்த நீர், மிச்சமிருந்த 2 கோப்பை தண்ணீர், இஞ்சிப்பசை, அஜினோ மோட்டோ, மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு சேர்க்கவும்.
நன்றாகக் கலக்கி கொதிக்கவிடவும். மூட வேண்டியதில்லை. தீயைக் குறைத்து 7 நிமிடம் வேகவிடவும். கலவையை மத்தி னால் மசித்துக் கொள்ளவும். சோளமாவை சூப் திடமாகிறவரை சேர்க்கவும். பரிமாறு வதற்கு முன் முறுகலான நூடுல்ஸ் தூவிக் கொள்ளவும். சூடாகப் பரிமாறலாம்.
No comments:
Post a Comment