பாசிப்பயறு அல்வா
தேவையான பொருட்கள் :
பாசிப்பயறு - 300 கிராம்
மைதா - 50 கிராம்
பால் - 4 கப்
சர்க்கரை - 400 கிராம்
நெய் - 400 கிராம்
முந்திரிப் பருப்பு - 20
ஏலக்காய் - 8
செய்முறை :
பாசிப் பயிறை ஓர் இரவு முழுவதும் ஊறப்போட்டு மறுநாள் காலையில் கசக்கி தோலை போக்கிவிடவும். பிறகு அதை வேக வைக்கவும். முந்திரிப் பருப்பை வறுத்து ஏல அரிசியை பொடித்துக்கொள்ளவும். வெந்த பாசிப் பருப்பை மசித்து அதோடு முந்திரிப் பருப்பு, ஏல அரிசி பவுடரை சேர்க்கவும். மைதாவை தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் பாசிப் பயறு மசியலையும் சேர்க்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி காய்ச்சவும். பாகுபதம் வந்ததும் அதோடு மைதா கலவையைச் சேர்த்து கிளறவும். கெட்டிபடத் தொடங்கிய தும் முந்திரிப் பருப்பு, ஏல பவுடர் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி ஆறியதும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
No comments:
Post a Comment